நோக்கு
அனைவருக்கும் பாதுகாப்பான பாதை
செயற்பணி
வீதி விபத்துகளற்ற சமுதாயமொன்றை உருவாக்குதல்.
1998 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் மூலம் போக்குவரத்து அமைச்சின் கீழ் இருக்கின்ற வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இயங்குகின்றது. அனைவருக்கும் பாதுகாப்பான வீதி முறைமையை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக்கொண்டு செயற்படுகின்ற ஒரே அரச நிறுவனம் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையாகும். இந்த சபை ஒரு தலைவரையும் அரச மற்றும் அரச சார்பற்ற 17 நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவொன்றையும் கொண்டுள்ளது.
அபிவிருத்தியடைந்துகொண்டிருக்கின்ற நாடொன்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்தல், சூழல் மாசடைவதைத் தடுத்தல், சூழல் பாதுகாப்பு, வாகனங்;கள் மற்றும் வாகன கட்டுப்பாடு என்பவற்றுடன் மோட்டார் வண்டிகளால் ஏற்படுகின்ற விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளுதல் மற்றும் சாலை பாதுகாப்பு என்பவையும கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதான விடயங்களாகும். இதன் நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி என்பற்றின் மூலம் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளுகின்றபோது மோட்டார் வாகனங்களால் ஏற்படுகின்ற விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளுதல், வீதிகளைப் பயன்படுத்துகின்றவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்ற துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு 2011 - 2020 காலத்தை வீதிப்பாதுகாப்பு தசாப்தமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு அதனோடு இணைந்ததாக இலங்கையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 2011 மே மாதம் 11 ஆம் திகதி வீதிப்பாதுகாப்பு தேசிய மகாநாட்டை நடாத்தி 2011 - 2020 காலத்தை வீதிப்பாதுகாப்பு தசாப்தமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்போது வீதிப் பாதுகாப்பு தொடர்பாக பத்தாண்டு திட்டமொன்றைத் தயாரித்து அதைப்பற்றி அறிவூட்டுவதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தில் 213 "அ", பிரிவில் இச்சபையின் கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் 213 "ஆ", பிரிவின் மூலம் 'வீதிப் பாதுகாப்பு நிதியம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்நிதியத்துக்கு காப்புறுதி கம்பனி தமது மூன்றாம் தரப்பு காப்புறுதியாக 1 மூ தொகையை பங்களிப்புச் செய்கிறது.