- அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்குள் வீதி பாதுகாப்புடன் தொடர்புபட்ட பணிகளை இணைப்பாக்கம் செய்தல்.
- அடையாளம் காணப்படாத வாகனங்களினால் விபத்துக்குள்ளாகின்றவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்.
- வீதிப் பாதுகாப்பு மற்றும் அதனோடு இணைந்த விடயங்களுடனான கருத்திட்டங்கள் மீது பொறுப்பு வகிக்கின்ற சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் தகவல்களை வழங்குதல்.
- தரவுக் களஞ்சியமொன்றைப் பேணுதல்.
- வாகனங்களின் தொகை மற்றும் அவற்றின் தன்மைகளின் சேர்க்கை.
- வீதி விபத்துக்கள்.
- வீதிப் பாதுகாப்பு தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச புள்ளிவிபரங்கள்.
- வீதிப் பாதுகாப்பு தொடர்பாக நூலகம் ஒன்றைப் பேணுதல்.
- சமமான சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணுதல் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளுதல்.
- வீதிப் பாதுகாப்பு தொடர்பாக கருத்திட்டமொன்றைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
- வீதிப் பாதுகாப்பு மற்றும் அதனோடு இணைந்த கொள்கைகளையும் கருத்திட்டங்களையும்பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகள்
- வீதிப் பாதுகாப்பு தொடர்பான ஆணைக்குழுவொன்றை அமைத்தல்.
- தரவுக்களஞ்சியமொன்றைத் தயாரித்தல்.
- வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையொன்றைத் தயாரித்தல்.
- தொலைக்காட்சி, வானொலி பிரசார நடவடிக்கைகள்
- அடையாளம் காணப்படாத வாகனங்களினால் விபத்துக்குள்ளாகின்றவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்.
- மாகாண வீதிப் பாதுகாப்பு குழுக்களை அமைத்தல் மற்றும் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் எதிர்கால நடவடிக்கைகள்.
- பலியானவர்கள் தினத்தை நினைவுகூர்தல்.
- பாடசாலை மாணவர்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், தனியார் பஸ் சாரதிகள் ஆகியோருக்கு அறிவூட்டுதல்.
- 2016 மார்ச் மாதத்தில் வீதிப் பாதுகாப்பு தேசிய தினத்தைக் கொண்டாடுதல்.
- பாடசாலைகளில் வீதிப் பாதுகாப்பு மாணவர் கழகம் அமைத்தல்.
- தெற்காசிய வலய நாடுகளில் அரச மற்றும் தொண்டர் அமைப்புகளின் பங்கேற்புடன் வீதிப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச செயலமர்வொன்றை நடத்துதல்.
- கட்டுபெத்த வீதித் தடையுள்ள இடத்திலிருந்து கவுடான சந்திவரைக்குமான வீதியை இடை தடுப்பு வலயமாக்குதல்.
- அந்த வீதித் தடையுள்ள இடத்தைப்பற்றி அறிவூட்டும் நிலையமாக்கி காட்சிப்படுத்தும் பலகைகளைப் பொருத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அறிவூட்டுதல்.
- தேசிய அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தும் குறியீடுகளை அப்பாடசாலைகளில் ஸ்தாபித்து அதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு செயல்முறை அறிவை வழங்குதல்.
- வீதிப்பாதுகாப்பு மாணவ செயலணியொன்றை அமைத்தல். அதற்குரியதாக அறிவூட்டுகிற ஒவ்வொரு பாடசாலையிலும் பாடசாலை மட்டத்தில் கழகங்களை உருவாக்குதல்.
- மார்ச் மாதத்தில் வீதிப் பாதுகாப்பு தேசிய தினத்தைப் பிரகடனப்படுத்தி நாடு முழுவதிலும் வீதிப்பாதுகாப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துதல்.
- ஒவ்வொரு தனியார் தொழிற்சாலையிலும் உற்பத்தித் திறன்மிக்க சாரதிகளை உருவாக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான அறிவை வழங்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தல்.
- அனைத்து இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் சாரதிகளுக்கு முறையாக அறிவூட்டுதல்.
- பாடசாலை வேன் சாரதிகளுக்கு அறிவூட்டி சேவை குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் என்பவற்றை ஆராய்ந்து அவற்றிக்கு ஒழுங்கான பரிகாரங்களை வழங்குதல்.
- முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஒழுங்குமுறையாக மற்றும் மனோபாவ ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தரமான முச்சக்கர வண்டி சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு உரிய பின்னணியை உருவாக்குதல்.
- அறிவூட்டும் பெயர்ப் பலகைகளையும் வீதி ஒழுங்கு சமிக்ஞை பலகைகளையும் ஒவ்வொரு நகரத்திலும் காட்சிப்படுத்துதல்.